தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிர்கள் மற்றும் சாலைகளை கனரக வாகனங்கள் மூலம் சேதப்படுத்தும் காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம் மற்றும் எட்டையபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய சாலைகள் போடப்பட்டது.
இந்நிலையில் விளைநிலங்களிலும், கிராமபுற சாலைகளிலும் 85 டன் வரை கனரக வாகனங்களை காற்றாலை நிறுவனம் பயன்படுத்துவதாகவும், இதனால் விளை நிலங்களும் சாலைகளும் சேதமடைவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.