தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்ததாக கன்னியாகுமரி மற்றும் கர்நாடக மாநில விசைப்படகு மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் வெடித்தது.
குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் குமரிக்கடல் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.
இதே பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுள்ளது.
இந்த நிலையில், குமரி நடுக்கடல் பகுதியில் கர்நாடகாவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சாவாளை மீன்களை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட குமரி விசைப்படகு மீனவர்கள், படகுகளை சிறைபிடிக்க முயன்றனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.