திண்டுக்கல் மற்றும் மருங்காபுரி தேர்தல்களை போல வரலாறு படைக்கும் தேர்தலாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இருக்கும் என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மணல்மேடு பகுதியில் செங்கோட்டையன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். திண்டுக்கல், மருங்காபுரி தேர்தல்களை போல, ஈரோடு தேர்தல் வரலாறு படைக்கும்
என்றும் அவர் தெரிவித்தார்.