நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கால்நடைகளை அடித்து இழுத்துச் செல்லும் மர்ம விலங்கு சிறுத்தை புலி என்று வனத்துறையினர் உறுதி செய்துள்ளதால் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செஞ்சுடையாம்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் என்பவரது பசு மாட்டின் கன்று குட்டியை மர்ம விலங்கு ஒன்று கடித்து இழுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் போட்டுச் சென்றுள்ளது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வந்த வனத்துறையினர் மர்ம விலங்கினை டிரோன் மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் அந்த மர்ம விலங்கின் கால் தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்ததில் சிறுத்தை புலி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.