டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட நெல்வயல்களை பார்வையிட்ட அன்புமணி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இக்கருத்தை தெரிவித்தார்.