அரசியல் கண்ணோட்டத்தில் மத்திய பட்ஜெட் போடப்படவில்லை என்றும் விவசாயம், நடுத்தர வர்க்கம், டிஜிட்டல் என பல்வேறு தரப்பு கோணத்தில் ஆராயப்பட்டு பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த அவர், பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ராஜீவ் சந்திரசேகர், 13.5 லட்சம் கோடியில் பெரிய அளவில் போடப்பட்டுள்ள இந்த மாடர்ன் பட்ஜெட் இந்தியாவை எதிர்காலத்தில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.