தருமபுரி நகராட்சியில் விநியோகிக்கப்படும் அதிக குளோரின் அளவு உள்ள குடிநீரினால் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் 18 நாட்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீரில் அதிக அளவு குளோரின் கலந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
குளோரின் அளவு அதிகமாக கலந்திருந்ததால் தண்ணீர் குளோரின் வாசனையுடன் இருப்பதால் குடிக்க முடியவில்லை என்றும் குடித்தால் தொண்டை வலி தொண்டைப்புன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.