தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே கதவைத் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் ஆறு சவரன் தங்க சங்கிலி பறித்து தப்பிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்திரா நகர் பகுதி பள்ளிவாசல் தெருவில் மூதாட்டியொருவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது 3 மகன்கள் வெளியூரில் வசித்துவருகின்றனர். எப்பொழுதும் 7 மணியளவில் வீட்டை பூட்டி தூங்கிவிடும் மூதாட்டி சம்பவத்தன்று, வீட்டின் வாயில் கதவு மற்றும் முன்கேட் ஆகியவற்றை மூடியதாக நினைத்து அயர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு ஒன்றரை மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர், மூதாட்டியின் முகத்தில் தலையணையை வைத்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார்.