திருவாரூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மையப்பன் அக்கரை தெருவைச் சேர்ந்த கவியரசன், தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திருக்கண்ணமங்கைக்குச் சென்றபோது கவியரசனை, காரில் வந்த மர்மகும்பல் வழி மறித்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
முத்துப்பேட்டையிலுள்ள தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்தனர். இந்நிலையில், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.