குட்கா மீதான தடையை உயர்நீதிமன்றம் நீக்கினாலும், தமிழ்நாடு அரசு போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீர்மானித்துள்ளதால், வியாபாரிகள் கடைகளில் குட்கா விற்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.