ஆள் கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய, எஸ்.பி-க்களின் அனுமதியை பெறத்தேவையில்லை என காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இக்கட்டான நேரங்களில், காலம் தாழ்த்தாமல், துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
தென்காசியில், காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண்ணின் கணவர் பொதுவெளியில் தாக்கப்பட்டு, அந்த பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், எப்.ஐ.ஆர் பதிய எஸ்.பி-யிடம் 3 முறை அனுமதி கோரியும், வீடியோ வைரலாகும் வரை அனுமதி வழங்காதது காவல்துறைக்கு பெரிய தர்மசங்கடம் என சைலேந்திர பாபு அதிருப்தி தெரிவித்துள்ளார்.