ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.
அசோகபுரத்தில், இடைத்தேர்தலையொட்டி அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.