திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞரை வங்கிக் காவலாளியும் பொதுமக்களும் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று காலை 3 ஊழியர்களே இருந்த நிலையில், கட்டிங் பிளேடு, கத்தியோடு உள்ளே நுழைந்த இளைஞர் பெப்பர் ஸ்ப்ரே மற்றும் மிளகாய் பொடியை தூவி, ஊழியர்களை பிளாஸ்டிக் டேப்பை வைத்து கட்டிப் போட்டுள்ளார்.
அதில் ஒரு ஊழியர் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டதையடுத்து, வங்கி காவலாளி மற்றும் பொதுமக்கள் வங்கிக்குள் சென்று இளைஞரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் என்ற அந்த இளைஞர், துணிவு உள்பட பல்வேறு திரைப்படங்களை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியுள்ளார்.