ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் அம்மன் வீதி உலாவில் கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் கிரேன் ஆபரேட்டர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு திருவிழா நிகழ்ச்சியில் கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததில் முத்து, பூபாலன், ஜோதிபாபு ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், சின்னசாமி என்பவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், நெமிலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.