ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா. மறைவையடுத்து, பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசினர்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றதால், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே அத்தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக கூட்டணி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.