மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் பலத்த காயமடைந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலமேட்டை சேர்ந்த கட்டடத்தொழிலாளி அரவிந்த் ராஜ், கடந்த 7 ஆண்டுகளாக பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அவர், முதல் 4 சுற்றுகள் முடிவில் 9 காளைகளை அடக்கி மூன்றாமிடத்தில் இருந்தார். ஐந்தாவது சுற்று தொடக்கத்தில் வாடிவாசல் அருகே நின்றபடி காளையை பிடிக்க முயன்ற அரவிந்த் வயிற்றில், ஆழமாக காளை முட்டியதில், அவர் காயமடைந்தார்.
பாலமேடு ஆரம்ப சுகாதார மையத்தில், அரவிந்திற்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.