ஓசூரில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையம் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிய 80 சதவீதம், தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், ஒசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ், ஓலா போன்ற தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர அரசு உதவி புரியும் என்றும் கூறினார்.