புதுக்கோட்டையில் 642 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே புதுக்கோட்டையில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் பழுதானதால் 75.6 கோடி செலவில் பைப்புகளை மாற்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க 200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.