தமிழ்நாடு சட்டமன்றத்தில், வினாக்கள், விடைகளுக்கான நேரத்தில், திருவள்ளூர் நகராட்சியை தரம் உயர்த்துவது குறித்து, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியதற்கு, நிதி நிலையை பொறுத்து, திருவள்ளூர் நகராட்சி தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
திருவள்ளூர் நகராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. சுற்றியுள்ள கிராமங்கள் நகரப் பகுதிகளாக மாறிவரும் நிலையில் திருவள்ளூர் நகராட்சியை தரம் உயர்த்தி பெருநகராட்சியாக மாற்றி புதிய கட்டிடங்கள் கட்ட அரசு முன்வருமா? என திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.
திருவள்ளூர் நகராட்சி மிகவும் பழமையான நகராட்சி. இது போன்ற பழமையான நகராட்சிகளை மேம்படுத்தும் விதமாக நிதிநிலைக்கேற்ப இந்த ஆண்டுக்குள் திருவள்ளுவர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டி தர பரிசீலிக்கப்படும் என கே.என்.நேரு பதிலளித்தார்..