தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தேவை அதிகரிப்பு மற்றும் பனிப்பொழிவினால் உற்பத்தி குறைவு காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்பேடு சந்தையில் ஆயிரத்து 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று 2 ஆயிரத்து நானூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உச்சபட்ச விலையை தொட்ட மல்லிகைப்பூ கிலோ 5 ஆயிரம் ரூபாய் வரையும், மாட்டுத்தாவணி மலர்சந்தையில் கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை உயர்வு
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்தது.