கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து ஏற்கனவே 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.