திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, ஆளுநரின் கருத்துக்களை, சட்ட சபைக் குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ, சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா? என வினவியுள்ளார்.
ஆளுநர் பேசிய பின்னர், மரபிற்கு புறம்பாக முதலமைச்சர் குறுக்கிட்டுப் பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக்குறிப்பில், எப்படி இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவதும் முற்றுலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை எல்லாம் ரேஷன் அதிகாரிகள் மூலம் வழங்காமல், அந்தந்த பகுதி திமுகவினர் மூலம் கொடுக்க காரணம் என்ன? என விமர்சித்துள்ள அண்ணாமலை, முதலமைச்சர் கொடுப்பது அரசின் பணமா? அல்லது திமுகவின் கட்சிப்பணமா? எனவும் கேட்டுள்ளார்.