பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு வேட்டி-சேலை, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை தீவுத்திடலில் உள்ள அன்னை சத்யா நகரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பணியை தொடங்கி வைக்கிறார்.