நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாகக்கூறி, பயிற்சி மருத்துவரை தாக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
65 வயதான குருசாமி, நுரையீரல் தொற்றால், வியாழக்கிழமை முதல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
நேற்றிரவு பயிற்சி மருத்துவர் நித்திஷ் ஆர்தர் ஊசி செலுத்திய சில மணி நேரத்தில் குருசாமி உயிரிழந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நித்திஷ் ஆர்தரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
நித்திஷ் ஆர்த்தர் அளித்த புகாரின்பேரில் குருசாமியின் மருமகன் ரவிக்குமாரை கைது செய்த போலீசார், குருசாமியின் மகள் உள்பட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.