தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோமதியாபுரம் 2-வது தெருவில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இலவன்குளம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக நடந்து வந்தபோது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். படுகாயம் அடைந்த மூதாட்டிச்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.