திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனை உதவி பொறியாளர், பணி நேரத்தில் அலுவலகத்திலேயே படுத்துறங்குவதாக கூறப்படும் வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.
பணிமனை உதவி பொறியாளரான ரகுநந்தன், பணி நேரத்தில் உறங்குவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்துகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் பேருந்துகளை இயக்க காலதாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பணிமனை மேலாளர் குமரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, ரகுநந்தன் மீது பல புகார்கள் வந்துள்ளதாகவும், ஏற்கனவே அவருக்கு 3 முறை மெமோ வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணை நடத்தி, ரகுநந்தன் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.