கோவில்பட்டி அருகே நள்ளிரவில் தனியார் இருசக்கர வாகன காப்பக உரிமையாளரை
வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகில், இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வந்த ஆனந்தராஜ் என்பவர், வழக்கம் போல் நேற்றிரவு காப்பகத்திலேயே கட்டிலில் படுத்துறங்கியுள்ளார். நள்ளிரவில் ஆனந்தராஜை வெட்டிக்கொலை செய்த கும்பல், போலீசில் சிக்காமல் இருக்க, சடலத்தைச் சுற்றி மிளகாய்ப் பொடி தூவிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.