மதுரை மண்டல ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக, 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
2020 - 2021ம் ஆண்டுகளில் ஆவினில் மேலாளர் உள்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன. இதில், தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் தேர்வானது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது 47 பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டது தெரிய வந்ததால், அவர்களின் பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டார். மேலும், அப்போதைய ஆவின் மேலாளர் காயத்ரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்
சுப்பையன் ஆணையிட்டுள்ளார்.