தீபாவளிக்கு திமுகவில், கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர், அது போல வறுமையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 100 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே ? என ப.சிதம்பரத்திடம் நிர்வாகி ஒருவர் கேட்டதற்கு , கொள்ளை அடிச்சா கொடுக்கலாம், அப்படி பண்ண சொல்கிறீர்களா ? என்று ப.சிதம்பரம் ஆவேசமாகும் வீடியோ வைரலாகி வருகின்றது..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கடந்த 1 ந்தேதி நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், தீபாவளிக்கு திமுகவில், கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர், அது போல வறுமையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எம்.பியாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் 100 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே ? என ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பினார்
அதற்கு கொள்ளை அடிச்சா கொடுக்கலாம், என்னயும் அப்படி பண்ண சொல்கிறீர்களா இல்ல எம்பி நிதியில் இருந்து காண்டிராக்ட் எடுத்து அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கி கொடுக்க சொல்கிறீர்களா என்று ப.சிதம்பரம் கேட்க, கட்சிகாரனின் வறுமையை எப்படி போக்குவது ? என்று அந்த தொண்டர் திருப்பி பிடிக்க வறுமை போகனுமுன்னா தப்பு பன்னனும் என்று பாலிசாக கூறி சமாளித்தார் ப.சிதம்பரம்
எப்படியாவது வறுமை நிலையை எடுத்துக்கூறி, ப.சிதம்பரத்திடம் ஒரு 100 ரூபாய் தேத்திரலாமுன்னு நெனச்ச அந்த ஏழை தொண்டர் பசியோடு அமரும் நிலைக்கு தள்ளப்பட்டார்
உங்க அளவுக்கு, கார்த்தி சிதம்பரத்துக்கு போதிய அனுபவமில்லை என்று பெண் தொண்டர் குரல் கொடுக்க அதனையும் அக்மார்க் சிரிப்போடு சமாளித்தார் ப சிதம்பரம்.
இதற்கிடையே ஊருக்கு நாலு கோஷ்டியுடன் செயல்படும் காங் தொண்டர்கள் ஆளாளுக்கு குரலை உயர்த்த அவர்களை சத்தம் போட்டு ப.சிதம்பரம் அமைதிப்படித்தினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது