ராமநாதபுரத்தில் கருகிய நெற் பயிர்களுடன் நிவாரணம் வழங்க கோரி ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடனை மற்றும் ஆர்.எஸ். மங்களம் தாலுக்கா பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், பருவ மழை பொய்த்ததால், நெற்பயிர் அனைத்தும் கருகியதாகவும் கூறப்படுகிறது.
கருகிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரியும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.