கள்ளக்குறிச்சி அருகே இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள், போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்குள் செல்ல முடிவெடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம பட்டியலின மக்கள், ஆறு மாத காலமாக இதற்காக போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திலம் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி டிஐஜி பகலவன், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் தலைமையில், பட்டியலின மக்கள் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன.