சேலம் மாவட்டம் ஆத்தூரில், கீத்து வீடுகள் நிறைந்த பகுதியில் நேர்ந்த தீ விபத்தில் 5 குடிசைகள் முற்றிலுமாக எரிந்தன.
புதுப்பேட்டையில், தென்னங்கீத்தால் வேயப்பட்டு தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் வசிப்பவர், கேஸ் அடுப்பை ’சிம்’மில் வைத்துவிட்டு வெளியே சென்றபோது தீ விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அனைப்பதற்குள் தீ வேகமாகப் பரவியதால், 5 குடிசைளும், அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் போடப்பட்டிருந்த பந்தலும் கொளுந்துவிட்டு எரிந்தது.
நகை, பணம், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமானதால் அக்கம்பக்கத்தினர் அரிசி, பருப்பு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினர்.