காஞ்சிபுரத்தை அடுத்த ராஜகுளத்தில் அரசு மதுபான கடையில் பீர் பாட்டிலுக்கு மேல் 20ரூபாய் வைத்து விற்பனை செய்யும் டாஸ்மார்க் ஊழியரிடம் மதுபிரியர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த கடையில் ஒருவர் பீர் வாங்கும் போது அரசு நிர்யணத்த 140ரூபாயை விட கூடுதலாக 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
இதனை அந்த மதுபிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி எதற்காக 20ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர் என கேட்க அந்த டாஸ்மார்க் ஊழியரோ உனக்கு என்ன பிரச்சனை என வாக்குவாதத்தில் ஈடுபடவே 10ரூபாய் திரும்ப கொடுத்திருக்கிறார்.
இதற்கு அந்த மதுபிரியர் கூடுதலாக பணம் பெறுவது எவ்வகையில் நியாயம் என கேட்டு இதனை பேஸ்புக்கில் பதிவிடுகிறேன் என கூற அந்த டாஸ்மார்க் ஊழியரோ துளியளவும் அச்சமின்றி பதிவிட்டு கொள் என கூறியிருக்கிறார்.