சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் தேனி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டிடிவி அளித்த பேட்டியில், அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே ஓ.பன்னீர்செல்வம் தான் என்று குற்றஞ்சாட்டினார்.