சென்னையில், சரக்கு வாகனங்கள் திருட்டு வழக்கில் கைதானவர்களில் ஒருவர், அல் உம்மா அமைப்பை சேர்ந்தவர் என்பதும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 13 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வந்தவர் என்றும், போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சரக்கு வாகனங்கள் திருடுபோனதாக கூறப்பட்ட நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், ஐந்து பேர் கொண்ட திருட்டு கும்பல் கைது செய்யப்பட்டது.
அவர்களில் கோயம்புத்தூரை சேர்ந்த இமாம் அலி, வாகனங்களை விற்று கிடைக்கும் பணத்தை, சிறையில் இருக்கும் அல் உம்மா அமைப்பை சேர்ந்தவர்களின் வழக்கு செலவுகளுக்கு பயன்படுத்தியதாக, போலீசாரின் விசாரணையின்போது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.