3200 ஆண்டுகளுக்கு முந்தைய முன் பொருநை - தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நெல்லையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெற்ற 81வது இந்திய வரலாற்று பேரவையின் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் தான் நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும் என்றார்.
மேலும், கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளதாகவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் கடல் கடந்த பயணம், வெற்றிகளை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.