பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்ரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழனி திருக்கோயிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை மேம்படுத்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான வரைவுத் திட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.