உருமாறிய கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், மாநிலங்கள் உஷாராக இருக்க வேண்டும் மற்றும் கொரோனா பரவலை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாண்டவியா அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிக்கப்பட்டோரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் முறைக்கு உட்படுத்தப்படுவதாக விளக்கினார்.