திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரியாக படிக்கவில்லை எனக் கூறி 4ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்ததாக தலைமை ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையான உஷாராணி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணைக்காக காவல்நிலையம் சென்ற உஷாராணி மயக்கமடைந்து கீழே விழுந்ததை அடுத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.