செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 60 ஏக்கர் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது.
கீழவேடு கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை, 5 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து, விவசாயம் செய்து வந்ததுடன், வீடு கட்டியும் வசித்து வந்தனர். இந்த இடம், காவலர் பயிற்சி பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்டதுடன், இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், ஆக்கிரமிப்பு இடம் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லையென தெரிகிறது.
இதனையடுத்து, இன்று செங்கல்பட்டு வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர், காவல்துறையினரின் உதவியுடன், வீட்டில் உள்ள பொருட்களை வெளியில் எடுத்து வைத்துவிட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் 5 வீடுகளையும் இடித்து அகற்றினர்.