நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அருகே, மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்துள்ளதால் கூக்கல்தொரை-கோத்தகிரி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் விவசாய நிலங்களுக்காக, வடிகால் கால்வாயில் நீரை தேக்கி வைத்ததால், மண்ணில் தண்ணீர் ஊறியதே, நிலச்சரிவுக்கு காரணமென, முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மலைப்பாதையில் இருந்து ஊற்று நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் பாறைகள் விழக்கூடிய அபாயம் இருப்பதால், சாலையிலிருந்து பாறைகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.