மனைவியை கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபாலுக்கு மனைவியை விஷம் கொடுத்து கொலை செய்த குற்றச்சாட்டில், மாவட்ட விரைவு நீதிமன்றம் 2018-ல் ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயபாலை விடுதலை செய்தது தீர்ப்பளித்தது.
அதிகாலை 5 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று ஜெயபால் கிராம நிர்வாக அலுவலரிடம், மனைவியை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் எனக் கூறுவது ஏற்கும் விதமாக இல்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கையில் மனைவியின் வயிற்றில் விஷம் இருந்ததாக கூறப்படவில்லை என்றும் கூறி தண்டனையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.