13 அமைச்சர்களின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டால், அதனை சட்டப்படி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அமைச்சர்களுக்கு தெரியும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை பாடியில் உள்ள கைலாசநாதர் கோயில், திருவாலீஸ்வரர் கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், குறைகள் பதிவிடுக செயலி மூலம் பெறப்பட்ட 4 ஆயிரத்து 98 புகார்களில் ஆயிரத்து 627 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.