தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வறுமை காரணமாக ஐந்து மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய், பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர்-மாரீஸ்வரி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து குழந்தையுடன் தனது தாய் அய்யம்மாள் வீட்டில் வசிக்கும் மாரீஸ்வரி வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகளை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் சூரம்மாள், மாரியப்பன் ஆகியோர் மாரீஸ்வரி, அய்யம்மாளை அணுகி குழந்தையை விற்றால் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாக கூறி குழந்தையை விற்க சம்மதிக்க வைத்துள்ளனர்.
செவ்வாய்கிழமை அன்று பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே குழந்தை விற்பனை செய்யப்படவிருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து காத்திருந்து கைது செய்தன
கோவில்பட்டியில் வறுமை காரணமாக ஐந்து மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய், பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர்-மாரீஸ்வரி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனை பிரிந்து குழந்தையுடன் தனது தாய் அய்யம்மாள் வீட்டில் வசிக்கும் மாரீஸ்வரி வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.