கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி விடியற்காலை விண் மீன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது.
இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.