மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் கூடுதலாக பள்ளியின் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவனிடம் சீனிவாசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேலும் பல மாணவர்களிடம் இதேபோல் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.