தமிழ்நாட்டில், ஆவின் நெய் விலை உயர்வை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தின் விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.