தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மின் கோட்டங்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 176 மின் கோட்டங்களுக்கு இடையிலான இணைப்புகளை, சமநிலைப்படுத்தும் வகையில், நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 11 புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.