ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையத்தில் பால்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில், நிறுவன ஊழியர் உடல் சிதறி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெண்டிப்பாளையம் அருகே பாலு டெய்ரி ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தில் புதிதாக பாய்லர் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிறுவனத்தில் பணிபுரியும் ராமன் என்ற முதியவர், இன்று காலை பாய்லரை இயக்க முயற்சித்தபோது திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாய்லரில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.