திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே குண்டும் - குழியுமாக இருக்கும் சாலையை சீர்செய்ய கோரி, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.
மகாதேவி மங்கலம் கிராமத்திலிருந்து அல்லியந்தல், ரகுநாத சமுத்திரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் - குழியுமாக இருக்கும் நிலையில், தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது.
சாலையை சரிசெய்ய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.